சாம்பியன்ஸ் டிராபி ஜெர்சி விவகாரம் தொடர்பாக பிசிசிஐ விளக்கம் அளித்துள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியின் ஜெர்சியில் பாகிஸ்தான் பெயர் அச்சிட மறுப்பு தெரிவித்ததாக செய்திகள் வெளியான நிலையில், பிசிசிஐ விளக்கம் அளித்துள்ளது.8வது ஊதியக்குழு, UPS: அடேங்கப்பா.....
ஐசிசி நடத்தும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் பிப்ரவரி 19ஆம் தேதி பாகிஸ்தானில் தொடங்குகிறது. மார்ச் 9ஆம் தேதி வரை நடைபெறும் இத்தொடரில் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி பாகிஸ்தான் சென்று விளையாட மறுப்பு தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து இந்திய அணி விளையாடும் அனைத்தும் போட்டிகளும் துபாயில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் 2027ஆம் ஆண்டு வரை பாகிஸ்தான் அணி சென்று விளையாடாது என அறிவித்தது. இதனிடையே இந்திய வீரர்கள் அணியும் ஜெர்சியில், தொடரை நடைபெறும் பாகிஸ்தான் பெயரை அச்சிட இந்திய கிரிக்கெட் வாரியம் மறுப்பு தெரிவித்ததாக தகவல்கள் வெளியானது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐசிசியிடம் புகார் தெரிவித்தது. அதில், பிசிசிஐ கிரிக்கெட்டிற்குள் அரசியலை கொண்டு வருகிறது. முதலில் பாகிஸ்தான் வந்து விளையாட மறுத்தது. பின்னர் இந்திய கேப்டனை குழு புகைப்படம் எடுக்க அனுப்ப மறுத்தது. தற்போது ஜெர்சியில் பாகிஸ்தான் பெயரை அச்சிட மறுத்துள்ளது எனப் புகார் தெரிவித்திருந்தது.இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைக்கியா விளக்கம் அளித்துள்ளார்.
லோகோ மற்றும் ஆடை கட்டுப்பாடு தொடர்பாக மற்ற அணிகள் என்ன செய்கிறதோ, அதே விதிமுறைகளைப் பின்பற்றுவோம். ஆனால் ஐசிசி ஊடக நிகழ்ச்சிகளுக்காக இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பாகிஸ்தான் செல்வாரா? என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை எனத் தெரிவித்தார்.சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி விளையாடும் முதல் போட்டியில் வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. இப்போட்டி பிப்.20ஆம் தேதி நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து 23ஆம் தேதி பாகிஸ்தானுடனும், மார்ச் 2ஆம் தேதி நியூசிலாந்து அணியுடனும் மோதுகிறது.
Icc Pcb Champions Trophy Champions Trophy 2025 India Pakistan Jersey Issue Champions Trophy Jersey Issue Cricket Cricket News In Tamil Latest News In Tamil India Squad Ind Vs Eng T20 சாம்பியன்ஸ் டிராபி சாம்பியன்ஸ் டிராபி 2025 இந்தியா பாகிஸ்தான் ஜெர்சி விவகாரம் பிசிசிஐ ஐசிசி கிரிக்கெட் கிரிக்கெட் செய்திகள் அண்மைச் செய்திகள் இன்றைய செய்திகள் கிரிக்கெட் அப்டேட் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்திய கிரிக்கெட் வாரியம்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
2025 Champions Trophy: பாகிஸ்தானில் மைதான ஆய்வு2025 சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் விரைவில் தொடங்க உள்ள நிலையில், பாகிஸ்தானில் உள்ள மைதானங்களின் தயாரிப்பு ஆய்வு ஐசிசி அதிகாரிகள் நடைபெற்று வருகிறது.
और पढो »
Champions Trophy: ரிஷப் பந்தா? கேஎல் ராகுலா? இந்திய அணி எடுத்துள்ள முக்கிய முடிவு!Champions Trophy Squad: அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சாம்பியன்ஸ் டிராபிக்கான அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி விளையாட உள்ளது.
और पढो »
சாம்பியன்ஸ் டிராபி: ஜடேஜாவை நான்காவது இடத்தில் பேட் செய்ய வைக்க வேண்டும் - ரவிச்சந்திரன் அஸ்வின்ஜடேஜாவை நான்காவது இடத்தில் பேட் செய்ய வைக்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
और पढो »
சாம்பியன்ஸ் டிராபி 2025: குல்தீப் யாதவ் காயம் காரணமாக பங்கேற்க வாய்ப்பு இல்லை!குல்தீப் யாதவ் காயம் காரணமாக சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரில் விளையாடுவது சந்தேகம். இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இடம் பெறுவது கூட சந்தேகத்திற்கு இடதுள்ளது.
और पढो »
ரோஹித் சர்மா ஓய்வு - பிசிசிஐ விளக்கம்ரோஹித் சர்மாவின் மோசமான படிப்பதால் ஓய்வு பற்றிய வதந்திகள் பரவி வருகின்றன. பிசிசிஐ ரோஹித் சர்மாவிடம் ஓய்வு பற்றி எந்த பேச்சும் நடக்கவில்லை என தெரிவித்துள்ளது.
और पढो »
சாம்பியன்ஸ் டிராபி: இந்திய அணியின் எதிர்பார்ப்புகள்2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் இந்திய ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ரோஹித் சர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா ஆகியோரின் கடைசி ஐசிசி தொடராக இருக்க வாய்ப்புள்ளதால், ரசிகர்கள் இந்திய அணி வெற்றி பெற்று ஐசிசி கோப்பையுடன் மூவரும் ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு அறிவிக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.
और पढो »