மதுபான முறைகேடு வழக்கில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நிம்மதி அளிக்கும் வகையில், ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்.
லட்சுமியின் அருளைப் பெற சிவனுக்கு அபிஷேகம் செய்யாலாம்! இது பெளர்ணமி சிவ வழிபாடு!டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, ஜாமீன் வழங்கியது. டெல்லி ரூஸ் அவென்யூ நீதிமன்றம், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமீன் மனுவை வியாழக்கிழமை விசாரித்தபோது, அவருக்கு ஒரு லட்சம் ரூபாய் பிணையில் ஜாமீன் வழங்க முடிவு செய்துள்ளது. டெல்லி முதல்வர் வெள்ளிக்கிழமை சிறையில் இருந்து வெளியே வரலாம் என்று கூறப்படுகிறது.
இருப்பினும், ஜாமீனை எதிர்த்து மனு தாக்கல் செய்ய 48 மணிநேர அவகாசமும் ED கேட்டுள்ளது. மறுபுறம், ரூஸ் அவென்யூ நீதிமன்றம் நாளை வெள்ளிக்கிழமை திகார் சிறையில் இருந்து ரூ.1 லட்சம் பிணையில் வெளியே வரலாம் என்று கூறியது. இந்நிலையில், திகார் சிறையில் இருந்து கெஜ்ரிவால் வெள்ளிக்கிழமை வெளியே வருவார் என்று கூறப்படுகிறது.
முன்னதாக, அரவிந்த் கெஜ்ரிவாலின் வழக்கறிஞர் குழு தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை நீதிமன்றம் ஒத்திவைத்திருந்தது. இருப்பினும், புதன்கிழமை கெஜ்ரிவாலின் வழக்கமான ஜாமீன் மனு மீதான இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், முடிவை ஒத்திவைக்க முடியாது என்று கூறியது. மேலும், முதலமைச்சரின் நீதிமன்றக் காவலையும் நீதிமன்றம் நீட்டித்தது.
வழக்கறிஞரின் வாதங்கள் நிறைவடைந்த நிலையில், அப்போது விடுமுறைக்கால நீதிபதி நியாயா பிந்து, தீர்ப்பை தள்ளிவைக்கப் போவதில்லை என்று கூறியிருந்தார். விசாரணையை வியாழக்கிழமைக்கு ஒத்திவைத்த அவர், தீர்ப்பை ஒத்திவைக்கப் போவதில்லை என்று கூறினார். இது ஒரு உயர்நிலை வழக்கு என்பது அனைவரும் அறிந்ததே. வாதங்களைக் கேட்ட பிறகு தீர்ப்பை வழங்குவேன் என்றார். புதன்கிழமை முதல்வர் கெஜ்ரிவாலின் வழக்கறிஞரின் வாதங்கள் நிறைவடைந்த நிலையில், அமலாக்க இயக்குநரகத்தின் வழக்கறிஞரின் வாதங்களை நிறைவு செய்ய முடியவில்லை.
டெல்லி மதுபான கொள்கை ஊழல் தொடர்புடைய சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத் துறை கடந்த மார்ச் 21ம் தேதி கைது செய்தது. விசாரணைக்கு பிறகு, கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி டெல்லி திகார் சிறையில் கெஜ்ரிவால் அடைக்கப்பட்டார். பின்னர் தேர்ந்த சமயத்தில் தேர்தல் பிரச்சாரத்திற்காக அவர் ஜாமீன் பெற்றிருந்தார். பின்னர் தேர்தல்கள் முடிந்த நிலையில் மீண்டும் சிறை சென்றார்.
Liquor Policy Case Delhi India
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
பிரதமர் அவர்களே.. எனது பெற்றோரை தயவு செய்து சித்திரவதை செய்யாதீர்கள் -கெஜ்ரிவால்Arvind Kejriwal Video: பிரதமரே, உங்கள் சண்டை என்னுடன் இருக்கட்டும்.. வயதான மற்றும் நோய்வாய்ப்பட்ட எனது பெற்றோரை தயவு செய்து சித்திரவதை செய்யாதீர்கள் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
और पढो »
திமுக அமைச்சர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு ஜூன் 19 ஆம் மீண்டும் விசாரணைதமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கு தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணை ஜூன் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது.
और पढो »
Kallakurichi Death : “மதுபான கடைகளை குறைக்க வேண்டும்” நடிகர் விஷாலின் வைரல் பதிவு!Kallakurichi Death : “மதுபான கடைகளை குறைக்க வேண்டும்” நடிகர் விஷாலின் வைரல் பதிவு!
और पढो »
அரவிந்த் சாமி போலவே இருக்கும் அவரது மகள்! அழகும் அப்படியே இருக்கே..வைரல் போட்டொ!அரவிந்த் சாமி போலவே இருக்கும் அவரது மகள்! அழகும் அப்படியே இருக்கே..வைரல் போட்டொ!
और पढो »
முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் ஜாமீன் மனுவை 21க்கு ஒத்திவைப்புகரூரில் சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்ட நில மோசடி வழக்கில், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஜாமீன் மனு மீதான விசாரணை 21ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
और पढो »
ஜெயலலிதா ராமஜென்மபூமிக்கு கர சேவகர்களை அனுப்பியதாக கூறுவது முற்றிலும் பொய்: புகழேந்திமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ராமஜென்மபூமிக்கு கர சேவகர்களை அனுப்பியதாக கூறுவதும் முற்றிலும் பொய்யானதாகும் என தூத்துக்குடியில் ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி செய்தியாளரிடம் தெரிவித்தார்.
और पढो »