Reserve Bank of India: ரிசர்வ் வங்கி, மத்தியில் ஆட்சிக்கு வரப்போகும் அரசுக்கு ஒரு பெரிய பரிசை அளித்துள்ளது. 2023-24 நிதியாண்டில் மத்திய அரசுக்கு ரூ.2.11 லட்சம் கோடி டிவிடெண்ட் வழங்க இந்திய ரிசர்வ் வங்கி புதன்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.
பட்ஜெட் டை விட அதிகமாக கிடைத்துள்ள ஈவுத்தொகை புதிய அரசாங்கத்திற்கு உதவியாக இருக்கும்.8th Pay CommissionVirat Kohli
ஜூன் 4 ஆம் தேதி மக்களவைத் தேர்தல் முடிவுகள் வந்தவுடன் புதிய அரசு மத்தியில் பொறுப்பேற்கும். ஆனால், அரசு அமைவதற்கு முன்னதாகவே இந்திய ரிசர்வ் வங்கி, மத்தியில் ஆட்சிக்கு வரப்போகும் அரசுக்கு ஒரு பெரிய பரிசை அளித்துள்ளது. 2023-24 நிதியாண்டில் மத்திய அரசுக்கு ரூ.2.11 லட்சம் கோடி டிவிடெண்ட் வழங்க இந்திய ரிசர்வ் வங்கி புதன்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது. ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் தலைமையில் நடைபெற்ற 608வது இயக்குநர்கள் கூட்டத்தில் ஈவுத்தொகை வழங்க முடிவு எடுக்கப்பட்டது.
இடைக்கால பட்ஜெட்டில், ரிசர்வ் வங்கி மற்றும் பொதுத்துறை நிதி நிறுவனங்களின் மொத்த ஈவுத்தொகை வருமானம் ரூ.1.02 லட்சம் கோடியாக இருக்கும் என அரசாங்கம் மதிப்பிட்டிருந்தது.இந்திய ரிசர்வ் வங்கி தற்போது வழங்கும் இந்த ஈவுத்தொகை கடந்த ஆண்டை விட இரண்டு மடங்கு அதிகம். 2022-23 நிதியாண்டில், ரிசர்வ் வங்கி அரசுக்கு ரூ. 87,416 கோடி ஈவுத்தொகை வழங்கியது. இதற்கு முன்னர் அதிகபட்சமாக 2018-19 நிதியாண்டில் ரிசர்வ வங்கி ஈவுத்தொகையாக அரசுக்கு 1.76 லட்சம் கோடி ரூபாய் அளித்தது. 2023-24ஆம் நிதியாண்டுக்கான உபரி தொகையாக ரூ.
2024-25 நிதியாண்டில், நிதிப் பற்றாக்குறை, அதன் செலவு மற்றும் வருவாயின் வித்தியாசத்தை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.1 சதவீதமாக, அதாவது ரூ.17.34 லட்சம் கோடியாகக் கட்டுப்படுத்த மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.பட்ஜெட்டை விட அதிக ஈவுத்தொகையைப் பெறுவது அடுத்த மாதம் அமையவுள்ள புதிய அரசாங்கத்திற்கு மிக உதவியாக இருக்கும். திட்டங்களுக்கான செலவினங்களை அதிகரிக்கவும் நிதிப் பற்றாக்குறையை சிறப்பாக நிர்வகிக்கவும் இது உதவும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.
மேக்ரோ பொருளாதார நிலைமைகள் மற்றும் கோவிட் -19 தொற்றுநோயால் ஏற்பட்ட அசாதாரண சூழலை கருத்தில் கொண்டு, 2018-19 முதல் 2021-22 வரையிலான நிதியாண்டுகளுக்கு இடையில் தற்செயல் அபாய இடையகத்தை 5.50 சதவீதமாக பராமரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஆர்பிஐ தெரிவித்துள்ளது. இது வளர்ச்சி மற்றும் ஒட்டுமொத்த பொருளாதார நடவடிக்கைகளுக்கு உதவும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
Rbi Big Gift Record Dividend RBI Reserve Bank Of India Central Government Lok Sabha Elections Shanktikanta Das RBI Dividend RBI Dividend To Government RBI Dividend News RBI News Today Rbi News Rbi Latest News Rbi Viral News மத்திய அரசு மக்களவைத் தேர்தல் இந்திய ரிசர்வ் வங்கி ஆர்பிஐ நிதியாண் ஈவுத்தொகை டெவிடெண்ட் மத்திய வங்கி பட்ஜெட் CRB டிவிடெண்ட் தொகை Dividend Amount See Details Here
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
நயினார் நாகேந்திரன் ரூ. 4 கோடி வழக்கு... சிபிசிஐடிக்கு திடீர் மாற்றம்!Nainar Nagenthiran: தேர்தல் நேரத்தில் போதிய ஆவணமின்றி ரூ. 4 கோடி பிடிப்பட்ட நிலையில், அந்த வழக்கு தற்போது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.
और पढो »
இந்த வழிகளில் பண பரிமாற்றம் செய்தால் வருமான வரி நோட்டீஸ் வரும் ஜாக்கிரதைIncome Tax Notice: ஒரு நிதியாண்டில் ஒருவர் ரூ.10 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட பணத்தை வங்கியில் டெபாசிட் செய்தால், அதை வருமான வரித்துறைக்கு தெரிவிக்க வேண்டியது அவசியமாகும்.
और पढो »
10 லட்சம் ரூபாய் கடனுக்கு 5 கோடி ரூபாய் சொத்தை பறிமுதல் செய்ய முயற்சி! தனியார் வங்கி மேனேஜர் மீது புகார்10 லட்சம் பணம் கொடுக்காததால் ஐந்து கோடி ரூபாய் மதிப்பிலான சொத்தை ஆந்திரா வங்கி மேலாளர் பறித்து வேறு நபருக்கு கொடுக்க முயல்வதாக கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர் புகார் அளித்துள்ளார்.
और पढो »
அடிச்சது ஜாக்பாட்... வங்கி கணக்கில் தவறுதலாக ரூ.9,900 கோடி வரவு...!உத்தரப்பிரதேச மாநிலம் பதோஹி மாவட்டத்தைச் சேர்ந்த பானு பிரகாஷ் என்பவர் தனது கணக்கில் ரூ.9,900 கோடி வரவு வைக்கப்பட்டதைக் கண்டு ஆச்சரியமடைந்தார்.
और पढो »
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் செய்தி: அகவிலைப்படியில் அதிரடி உயர்வு7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. ஜூலை 2024 முதல் ஊழியர்களின் ஊதியத்தில் மிகப்பெரிய ஏற்றம் இருக்கும்.
और पढो »
உங்கள் மலத்தை தானம் செய்தால் மாதம் ரூ.1.4 கோடி சம்பாதிக்கலாம்!மைக்கேல் ஹாரோப் என்பவரால் தொடங்கப்பட்ட ஹ்யூமன் மைக்ரோப்ஸ் என்ற நிறுவனம் உங்கள் மலத்திற்கு கிட்டத்தட்ட ரூ. 1 கோடியே 40 லட்சம் வழங்குகிறது.
और पढो »