Why Stalin Not Go To Govt Hospital: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு மருத்துவமனைக்கு செல்லாமல், அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றது ஏன் என அமைச்சர் மா. சுப்பிரமணியம் விளக்கம் அளித்துள்ளார்.
Why Stalin Not Go To Govt Hospital: தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அரசு மருத்துவமனைக்கு செல்லாமல், அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றது ஏன் என அமைச்சர் மா. சுப்பிரமணியம் விளக்கம் அளித்துள்ளார்.Lokesh Kanagarajமாதம்பட்டி ரங்கராஜ்ஜின் 2வது மனைவி.
.ஏற்கனவே திருமணம் ஆனவர்! யார் இந்த ஜாய் கிரிஸில்டா?முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த ஜூலை 21ஆம் தேதி வழக்கம்போல், நடைபயிற்சி மேற்கொள்ளும்போது திடீரென தலைசுற்றல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன்பின் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. முதல்வர் ஸ்டாலின் அங்கிருந்து ஓய்வு பெற மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இதன்பின் மருத்துவமனையில் இருந்தவாரே அவர் அரசு பணியில் ஈடுப்பட்டார், தலைமை செயலாளர் முருகானந்தம் உள்ளிட்டோருடன் அவர் திட்டம் குறித்து ஆலோசனை மேற்கொண்டார். இது தொடர்பான வீடியோவும் வெளியானது. பின்னர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இதயத் துடிப்பு மாறுபாட்டுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டன. ஆஞ்சியோ சோதனையும் மேற்கொள்ளப்பட்டது. அவர் ஒரு வாரமாக மருத்துவமனையில் இருந்த நிலையில், நேற்று அமைச்சர் கனிமொழி, மா. சுப்பிரமணியன் உள்ளிட்டோர் நேரில் சென்று நலம் விசாரித்தனர். இந்த நிலையில், இன்று மாலை அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார். தொடர்ந்து 7 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது அவர் வீடு திருப்பி இருக்கிறார். 3 நாட்களுக்கு பின் அவர் வழக்கம்போல் பணிகளை மேற்கொள்ளலாம் என அப்பல்லோ மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கிடையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஏன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறாமல் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார் என்று பாஜக மாநில முன்னாள் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் விமர்சித்திருந்தார். மேலும், தமிழகத்தில் முதலமைச்சர் உட்பட நம்பிக்கையுடன் சென்று சிகிச்சை பெரும் அளவிற்கு அரசாங்க மருத்துவமனைகள் இல்லையே என்பதுதான் எனது ஆதங்கம் என வேதனை தெரிவித்திருந்தார்.இந்த நிலையில், தமிழிசை செளந்தரராஜனின் விமர்சனத்திற்கு அமைச்சர் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் பதில் அளித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், தமிழிசை இரண்டு மாநிலங்களில் ஆளுநராக இருந்தவர். தமிழிசைக்கு அரசு மருத்துவமனை எப்படி செயல்படும் என்று தெரியும். சமீபத்தில், பாதுகாப்பு துறை அமைச்சரின் மனைவி கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில்தான் சிகிச்சை பெற்றார். பிரதமர் சகோதரர் கூட தனியார் மருத்துவமனையில் தமிழகத்தில் சிகிச்சை பெற்றார் . உயர் பொறுப்புகளில் இருப்பவர்கள் அரசு மருத்துவமனைக்கு சென்றால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும். அதனால்தான் முதல்வர் தனியார் மருத்துவமனைக்கு சென்றார். அரசு மருத்துவமனைகளின் தரம் மிக சிறப்பாக இருக்கிறது. அரசு மருத்துவ சேவை, தனியார் மருத்துவ சேவை என பிரித்து பார்க்க கூடாது. அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது என்றார். மேலும் படிக்க: டிஸ்சார்ஜ் ஆன முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.. உடல்நிலை எப்படி இருக்கு? அப்போலோ வெளியிட்ட அறிக்கை!உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!Weight Loss Tipsபுதிய UPI விதிகள்: ஆகஸ்ட் 1 முதல் GPay, Phonepe, Paytm பரிவர்த்தனைகளில் முக்கிய மாற்றங்கள்EPS Pension: ரூ.61,000 அடிப்படை ஊதியம், 27 ஆண்டு சர்வீஸ், மாத ஓய்வூதியம் எவ்வளவு கிடைக்கும்?Navjot SidhuTamilisai Soundararajan
Mk Stalin Tamilisai Soundrarajan Why Stalin Did Not Go Government Hospital Apollo Hospital Stalin Discharged From Hospital மா சுப்பிரமணியன் ஸ்டாலின் முக ஸ்டாலின் தமிழிசை செளந்தரராஜன் முதல்வர் ஏன் அரசு மருத்துவமனைக்கு செல்லவில்லை முதலமைச்சர் ஸ்டாலின் ஏன் அப்பல்லோ மருத்துவமனையில் அண்மைச் செய்திகள் திமுக பாஜக 2026 தேர்தல் அரசு மருத்துவமனை வசதிகள்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கை - உயர்கல்வித்துறை முக்கிய அறிவிப்புTamil Nadu government : தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான இணையதள முகவரியில் குறைபாடுகள் ஏற்பட்டுள்ளதாக வெளியான செய்திக்கு உயர்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.
और पढो »
வரும் ஜூலை 7ம் தேதி பள்ளி, அரசு அலுவலகங்களுக்கு விடுமுறையா?முகரம் பண்டிகையை முன்னிட்டு ஜூலை 7 அன்று அரசு விடுமுறை என்று சமூக வலைதளங்களில் பரவும் வதந்திக்கு தமிழக அரசு விளக்கம் அளித்துள்ள்ளது.
और पढो »
அரசு பேருந்தில் ரஜினி பட பெயர் பலகை.. நடத்துநர் சஸ்பெண்ட்!அரசு பேருந்தில் திருவண்ணாமலைக்கு பதிலாக அருணாச்சலம் என்ற பெயர் பலகை இருந்ததை அடுத்து அப்பேருந்து நடத்துநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
और पढो »
LIVE : சோழ மண்ணில் பிரதமர் நரேந்திர மோடி முதலமைச்சர் வைத்த முக்கிய கோரிக்கைLIVE : சோழ மண்ணில் பிரதமர் நரேந்திர மோடி முதலமைச்சர் வைத்த முக்கிய கோரிக்கை - இன்றைய அப்டேட்ஸ்
और पढो »
டிஸ்சார்ஜ் ஆன முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.. உடல்நிலை எப்படி இருக்கு? அப்போலோ வெளியிட்ட அறிக்கை!MK Stalin: தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த 7 நாட்களாக அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது வீடு திரும்பி உள்ளார்.
और पढो »
அப்போலோ தரத்திற்கு அரசாங்க மருத்துவமனைகளும் இருக்க வேண்டும்தமிழகத்தில் முதலமைச்சர் உட்பட நம்பிக்கையுடன் சென்று சிகிச்சை பெரும் அளவிற்கு அரசாங்க மருத்துவமனைகள் இல்லையே என்பதுதான் எனது ஆதங்கம் என தமிழிசை செளந்தரராஜன் வேதனை தெரிவித்துள்ளார்.
और पढो »
