Tamil Nadu Government : தமிழ்நாட்டு பெண்களுக்கு மூன்று முக்கிய அறிவிப்புகளை அரசு வெளியிட்டுள்ளது. தொழில் தொடங்க கடனுதவி, மானியம் பெற விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Tamil Nadu Government : தமிழ்நாட்டு பெண்களுக்கு மூன்று முக்கிய அறிவிப்புகளை அரசு வெளியிட்டுள்ளது. தொழில் தொடங்க கடனுதவி, மானியம் பெற விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.பெண்கள் தொழில் கடன் பெற விண்ணப்பிக்கலாம்Malayalam Thrillersvastu tips Tamil Nadu Government : தமிழ்நாட்டின் பொருளார வளர்ச்சியில் பெண்களின் பங்கு மேலும் அதிகரிக்க வேண்டும்.
என்ற நோக்கத்தோடு மகளிரை தொழில் முனைவோராக்கும் பொருட்டு தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம் என்ற புதிய திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் ரூ.10,00 லட்சம் வரை 25 சதவீதம் மானியத்துடன் கூடிய வங்கிக் கடனுதவியும், வழங்குவதோடு, தொழில் வளர்ச்சிக்குத் தேவையான தொழில் நுட்ப மற்றும் சந்தைபடுத்துதல் உள்ளிட்ட அனைத்து உதவிகளும் வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் பயன்பெற பெண்கள் மட்டுமே தகுதியானவர்கள் ஆவார்கள்.குறைந்தபட்ச வயது 18 முதல் அதிகபட்ச வயது 55 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் உற்பத்தி, வியாபாரம் மற்றும் சேவை சார்ந்த தொழில்களுக்கு மானியத்தடன் கூடிய கடன் வசதி பெறலாம். தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்தில் மக்கும் பொருட்கள் தயாரிப்பு, விவசாய உற்பத்தி கழிவுகளில் இருந்து பொருட்கள் தயாரித்தல், தென்னை நாரிமூலம் தயாரிக்கப்படும் செடி வளர்க்கும் தொட்டிகள், காகித கழிவுகளிலிருந்து பென்சில் தயாரித்தல், ஆடை வடிவமைப்பு,அலங்கார அணிகலன்கள் தயாரிப்பு, கண்ணாடி ஒவியம் தொழில் செய்ய விண்ணப்பிக்கலாம்.கண்ணாடி பொருட்கள் தயாரிப்பு, பட்டு நூல் அணிகலன் தயாரிப்பு, குழந்தைகள் பராமரிப்பு நிலையம், வீட்டில் தயார் செய்யும் உணவுப்பொருட்கள், யோகா நிலையம், வளர்ப்பு பிராணி பராமரிப்பு நிலையம், உடற்பயிற்சி நிலையம், சலவை நிலையங்கள், அழகு நிலையம். மெகந்தி மற்றும் டாட்டூ நிலையம், சத்து மாவு உருண்டைகள் தயாரிப்பு, சத்து மாவு சார்ந்த பேக்கரி உணவுபொருட்கள் தயாரிப்பு. தானிய வகைகளில் தயார் செய்யும் ஐஸ்கிரிம், எலுமிச்சை எண்ணெய் தயாரிப்பு. வெட்டி வேர் எண்ணெய் தயாரிப்பு உள்ளிட்ட தொழில்களுக்கு முன்னுரிமை அளித்து மானியத்துடன்எனவே இத்திட்டத்தில் தொழில் துவங்க ஆர்வமுள்ள பெண்கள் உரிய ஆவணங்களான புகைப்படம், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, ஜாதி சான்றிதழ்.ஆவணங்களுடன் பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், தாந்தோணிமலை, கரூர் அலுவலகத்தை நேரிலோ தொடர்பு கொள்ளலாம். அலுவலக தொலைபேசி எண்-, 89255 33960 மாவட்ட தொழில் மையம், 95/2A2, ராஜா நகர், கள்ளக்குறிச்சி அலுவலகத்தை நேரடியாகவோ அல்லது 04151-294057, 7760037120, 8248878219, 8825883896 ஆகிய தொலைபேசி எண்கள் வாயிலாகவோ தொடர்பு கொள்ளலாம். மற்ற மாவட்டத்தினர் அந்தந்த மாவட்ட தொழில் மையத்தை தொடர்பு கொள்ளவும்.பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தைச் சார்ந்த தையல் தொழில் தெரிந்த 10 நபர்களைக் கொண்ட குழுவிற்கு, தகுதிகளின் அடிப்படையில் நிதியுதவி வழங்கப்படவுள்ளது என சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினரின் பொருளாதார மேம்பாட்டிற்காக, மாறிவரும் சூழலுக்கு ஏற்ப ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு ஏற்படுத்திட தையல் தொழில் தெரிந்த 10 நபர்கள் கொண்ட குழுவிற்கு ரூ.3,00,000/- மதிப்பீட்டிலான நிதியுதவி வழங்கப்படவுள்ளது. இந்நிதியுதவி பெற விண்ணப்பிக்கும் குழுவினைச் சார்ந்த உறுப்பினர்கள் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தைச் சார்ந்தவர்களாகவும், குறைந்தபட்சம் 20 வயது பூர்த்தி அடைந்தவர்களாகவும், 10 நபர்களை கொண்ட ஒரு குழுவாகவும் இருந்திடல் வேண்டும். மேலும், குழுவில் உள்ள உறுப்பினர்களின் ஆண்டு வருமானம் ரூ.1,00,000/த்திற்கு மிகாமலும், அக்குழுவினை சார்ந்த 10 நபர்களுக்கும் தையல் தொழில் தெரிந்திருத்தல் அவசியம் ஆகும். மேலும், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் மூலம் பயிற்சி பெற்ற நபர்களை கொண்ட குழுவிற்கு முன்னுரிமையும், விதவை, கணவரால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் ஆதரவற்ற விதவை பெண்களால் அமையப்பெற்றுள்ள குழுவிற்கு முன்னுரிமையும் வழங்கப்படும். எனவே, குறிப்பிட்டுள்ள திட்டத்தின் கீழ் பயன்பெற விருப்பமும், தகுதியும் உள்ள குழுவினர், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை உரிய ஆவணங்களுடன் நேரில் அணுகி, விண்ணப்பித்து பயன்பெறலாம்மேலும் படிக்க: பெண்களுக்கு நல்ல சான்ஸ்! அங்கன்வாடியில் வேலை - எப்படி விண்ணப்பிக்கலாம்? உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!I am Karthikeyan, a Senior Sub-Editor at Zee Tamil News Channel, bringing 10 years of experience in the media industry. I have extensive experience working in both news television and online website platforms.அரசன் படத்தில் யாருமே எதிர்பார்க்காத நடிகர்! சிம்புவுடன் 2வது படம்..யார் தெரியுமா?இனி ரூ.10 லட்சம்! மூத்த குடிமக்களுக்கு ஜாக்பாட்.. ஆயுஷ்மான் திட்டத்தில் மேஜர் மாற்றம்!அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கிய செய்தி! தமிழ்நாடு அரசு வெளியிட்ட பட்டியல்ஆயுள் சான்றிதழ்: ஓய்வூதியதாரர்கள் வீட்டில் இருந்தபடியே DLC சமர்ப்பிபது எப்படி? முழு செயல்முறைமாறும் சம்பளக் கணக்கீடு: ஐடி துறை ஊழியர்களுக்கு வரவிருக்கும் ஜாக்பாட் சலுகைகள்!
Tamil Nadu Women Entrepreneurship Scheme தமிழ்நாடு அரசு தொழில் கடன் திட்டம் பெண்களுக்கான திட்டங்கள் மானியம் தமிழ்நாடு அரசு லேட்டஸ்ட் அறிவிப்பு Women Loan Subsidy TN MSME Women Loan Tamil Nadu Apply Women Entrepreneur Grant Rs. 2 Lakh Subsidy Women Rs. 10 Lakh Loan Women Sivaganga Rs. 3 Lakh Assistance Tailoring Group Grant How To Apply Women Loan TN Women Self-Employment Scheme Tamil Nadu
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
சென்னை டூ குற்றாலம் 3 நாள் சுற்றுலா... தீர்த்தப்பாறைக்கும் போகலாம்Tamil Nadu Government: தீர்த்தப்பாறை மலையேற்றத்துடன் குற்றாலத்திற்கு மூன்று நாள் சுற்றுலா திட்டத்தை தமிழ்நாடு அரசின் சுற்றுலாத்துறை ஏற்பாடு செய்துள்ளது. இந்த சுற்றுலா குறித்து முழு விவரங்களையும் இங்கு காணலாம்.
और पढो »
10 லட்சம் மாணவர்களுக்கு இலவச லேப்டாப்.. எப்போது கிடைக்கும்? முழு விவரம்!Tamil Nadu Government Free Laptops: தமிழக அரசு சுமார் 10 லட்சம் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்பட உள்ள நிலையில், அது தொடர்பாக புது அப்டேட் வெளியாகி உள்ளது.
और पढो »
பொங்கலுக்கு முன் சப்ரைஸ்.. ரேஷன் அட்டைதாரர்களுக்கு தயாரான பரிசு.. தேதி குறித்த தமிழக அரசுTamil Nadu Government: பொங்கலுக்கு இலவச வேட்டி, சேலைகள் 2025 நவம்பர் 15ஆம் தேதி முதல் ரேஷன் அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்யப்படும் என அமைச்சர் காந்தி தெரிவித்துள்ளார்.
और पढो »
வந்தது புது கண்டீஷன்.. தள்ளுவண்டி கடைகளுக்கு இனி இது கட்டாயம்!Tamil Nadu Government: தமிழகத்தில் சாலையோரத்தில் இருக்கும் தள்ளுவண்டி கடைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை முக்கிய கண்டீஷன் போட்டுள்ளது.
और पढो »
தமிழ்நாடு அரசின் முக்கிய அறிவிப்பு! உழவர் நல சேவை மையத்துக்கு உடனே விண்ணப்பிக்கவும்Tamil Nadu Government : முதலமைச்சரின் உழவர் நல சேவை மையம் அமைக்க உடனே விண்ணப்பிக்குமாறு தமிழ்நாடு அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
और पढो »
குடும்பக் கட்டுப்பாடு : ஆண்களுக்கு உதவித்தொகை - தமிழ்நாடு அரசு அறிவிப்புTamil Nadu Government : குடும்பக் கட்டுப்பாடு செய்யும் ஆண்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
और पढो »




