8th Pay Commission Latest News: 8வது ஊதியக்குழுவின் பரிந்துரைகள் அமலுக்கு வந்தவுடன் தற்போது மாதம் ரூ.40,000 சம்பாதிக்கும் ஒரு அரசு ஊழியரின் அடிப்படை சம்பளம் ரூ.1 லட்சமாக உயரக்கூடும்.
8th Pay Commission Latest News : 8வது ஊதியக்குழு வின் பரிந்துரைகள் அமலுக்கு வந்தவுடன் தற்போது மாதம் ரூ.40,000 சம்பாதிக்கும் ஒரு அரசு ஊழியரின் அடிப்படை சம்பளம் ரூ.1 லட்சமாக உயரக்கூடும்.8வது சம்பளக் குழுவின் மூலம் கிடைக்கக்கூடிய சம்பளம் உயர்வு எவ்வளவு?லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் 8வது ஊதியக் குழு வின் பரிந்துரைகளுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
8வது சம்பளக் குழுவை அமைக்கும் முடிவுக்கு மத்திய அரசு ஜனவரி 16, 2025 அன்று ஒப்புதல் அளித்தது. புதிய சம்பளக் குழுவின் பரிந்துரைகள் ஜனவரி 1, 2026 முதல் அமல்படுத்தப்பட வேண்டும். ஆனால் இதுவரை ஆணையத்தின் உறுப்பினர்கள் மற்றும் தலைவரது நியமனப் பணிகள் நிறைவடையவில்லை. ஆகையால் இதன் அமலாக்கம் தாமதப்படலாம் என கூறப்படுகின்றது. 2026 ஆம் ஆண்டின் மத்தியிலோ அல்லது 2027 ஆம் ஆண்டு ஜனவரி முதலோ 8வது ஊதியக்குழு அமலுக்கு வரக்கூடும் என கூறப்படுகின்றது. எனினும், ஜனவரி 2026 முதல் 8வது ஊதியக்குழுவின் நன்மைகளின் நிலுவைத் தொகை கிடைக்கும்.இந்த ஆணையத்தின் மூலம், சம்பளம், ஓய்வூதியம் மற்றும் படிகளில் திருத்தம் செய்யப்படும், இது நாட்டின் சுமார் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கும் 65 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கும் பயனளிக்கும்.ஊதியக்குழுவின் பரிந்துரைகள் பற்றி பேசப்படும்போதெல்லாம், ஃபிட்மென்ட் ஃபாக்டர் பற்றி கண்டிப்பாக பேசப்படுகின்றது. ஊதியக்குழுவின் பரிந்துரைகளில் ஃபிட்மென்ட் ஃபாக்டர் முக்கிய பங்கு வகிக்கின்றது. இது ஒரு பெருக்கியாக செயல்படுகிறது. இதன் அடிப்படையில் அனைத்து ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் ஒரே விகிதத்தில் அதிகரிக்கப்படுகிறது. இது அனைத்து கிரேடுகள் அல்லது ஊதியக் குழுக்களிலும் பணிபுரியும் ஊழியர்களுக்கு சமமான ஊதிய உயர்வு கிடைப்பதை உறுதி செய்கிறது.8வது சம்பளக் குழு மூலம் ஃபிட்மென்ட் ஃபாக்டர் பற்றி இன்னும் அதிகாரப்பூர்வமாக எதுவும் அறிவிக்கப்படவில்லை. இருப்பினும், இது சுமார் 2.5 என்ற அளவில் நிர்ணயிக்கப்படலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. அப்படி நடதால், தற்போது மாதம் ரூ.40,000 சம்பாதிக்கும் ஒரு அரசு ஊழியரின் அடிப்படை சம்பளம் ரூ.1 லட்சமாக உயரக்கூடும்.8வது ஊதியக்குழுவில் ஓய்வூதியத்திலும் பெரிய ஏற்றம் இருக்கும். சில உதாரணங்களின் மூலம் இதை புரிந்துகொள்ளலாம்.- 8வது ஊதியக் குழுவில் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 2.86 ஆக நிர்ணயிக்கப்பட்டால், ரூ.50,000 ஓய்வூதியம் பெறும் ஓய்வு பெற்ற ஊழியருக்கு புதிய ஓய்வூதியமாக சுமார் ரூ.14,3000 கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது ஓய்வூதியத்தில் ரூ.93,000 கூடுதலாக கிடைக்கும்.Salary Calculation: ஊதிய கணக்கீடுஒரு ஊழியரின் தற்போதைய அடிப்படை சம்பளம் ரூ.40,000 என்றும், ஃபிட்மென்ட் ஃபாக்டர் 2.5 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும் வைத்துக்கொள்வோம். அப்போது புதிய சம்பளம் மாதத்திற்கு ரூ.40,000 × 2.5=ரூ.1,00,000 ஆக இருக்கும். இருப்பினும், இது ஒரு மதிப்பீடுதான். ஆணையத்தின் அறிக்கைக்குப் பிறகு அரசாங்கத்தால் இறுதி முடிவு எடுக்கப்படும்.7வது ஊதியக்குழுவில், ஃபிட்மென்ட் ஃபாக்டர் 2.57 ஆக நிர்ணயிக்கப்பட்டது. குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் ரூ.7,000 லிருந்து ரூ.18,000 ஆக உயர்ந்தது. ஓய்வூதியமும் ரூ.3,500-லிருந்து ரூ.9,000 ஆக உயர்த்தப்பட்டது. இது தவிர, அரசு ஊழியர்களுக்கு ஒரு சுகாதார காப்பீட்டுத் திட்டமும் செயல்படுத்தப்பட்டது.மேலும் படிக்க | மாதம் ரூ.1 லட்சம் பென்ஷன் வாங்கலாம்... இன்றே NPS முதலீட்டை தொடங்குங்கள் உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!காவல்துறைக்கு புதிய கட்டுப்பாடு! இனி இதற்கு அபராதம் விதிக்க முடியாது!Clean White Clothesஇனி மஞ்சள் ஜெர்ஸியில் சஞ்சு சாம்சன்? - இந்த ஸ்டார் வீரரை RR உடன் டிரேட் செய்யும் CSK?!ITR 2025: வருமான வரி தாக்கலுக்கான காலக்கெடு விபரம்... தவறினால் அபராதம் விதிக்கப்படும்
What Is The Estimated Salary Hike Salary Hike Pension Hike For Central Government Employees Pensioners 8Th Cpc Latest News 8Th Cpc Latest News Fitment Factor Salary Calculation 7Th Pay Commission 8வது ஊதியக்குழு 8வது ஊதியக் குழு மாத ஓய்வூதியம் ஓய்வூதியதாரர்கள் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் மத்திய அரசு ஊழியர்கள் ஊதிய உயர்வு சம்பள உயர்வு ஓய்வூதிய உயர்வு அடிப்படை சம்பளம் அடிப்படை ஊதியம் 7வது ஊதியக்குழு 7வது ஊதியக் குழு 8Th Pay Commission Latest News 8Th Pay Commission Latest News In Tamil Business News In Tamil
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
EPF உறுப்பினர்களுக்கு சூப்பர் செய்தி: 7 மடங்குக்கு மேல் அதிகரிக்கும் மாத ஓய்வூதியம், விவரம் இதோEPFO Update: தனியர் துறை ஊழியர்களுக்கு மிகப்பெரிய செய்தி. மாத ஓய்வூதியம் அதிகரிக்கவுள்ளது. ஓய்வூதியத்தை ரூ.1,000 லிருந்து ரூ.7,500 ஆக உயர்த்துமாறு நாடாளுமன்றக் குழு கோரியுள்ளது.
और पढो »
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை : ஒரே வீட்டில் இரண்டு பெண்கள் ஓய்வூதியம், உரிமைத் தொகை பெற முடியுமா?Kalaingar Magalir Urimai Thogai : ஒரே வீட்டில் இருக்கும் இரண்டு பெண்கள் தமிழ்நாடு அரசு வழங்கும் கலைஞர் உரிமைத் தொகை மற்றும் மாத ஓய்வூதியம் பெற முடியும். எப்படி என்பதைஇங்கே தெரிந்து கொள்ளுங்கள்
और पढो »
EPS Pension: ரூ.50,000 அடிப்படை ஊதியம், 25 ஆண்டு சர்வீஸ்... ஓய்வூதியம் எவ்வளவு கிடைக்கும்? முழு கணக்கீடு இதோEPS Pension Calculator: இந்த பதிவில் ஒரு உதாரணத்தின் மூலம் தனியார் துறை ஊழியர்களுக்கு கிடைக்கும் ஓய்வூதியம் பற்றி புரிந்துகொள்ளலாம். ஒருவரது அடிப்படை சம்பளம் மாதம் ரூ.50,000 என்று வைத்துக்கொள்வோம்.
और पढो »
8வது ஊதியக்குழு, குஷியில் ஊழியர்கள்: ஊதியம், ஓய்வூதியத்தில் 186% அதிகரிப்பு, காரணம் Fitment Factor எனும் மந்திரக்கோல்8th Pay Commission: சம்பளம் மற்றும் ஓய்வூதியக் கணக்கீடுகளில் முக்கிய அங்கமான ஃபிட்மென்ட் ஃபாக்டர் 2.86 ஆக திருத்தப்படலாம் என்றும், குறைந்தபட்ச ஓய்வூதியம் 186 சதவீதம் வரை அதிகரிக்கக்கூடும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது பற்றி இங்கே காணலாம்.
और पढो »
8வது ஊதியக்குழு: Fitment Factor மாறாவிட்டாலும் மிகப்பெரிய ஊதிய உயர்வு உறுதி, கணக்கீடு இதோ8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் செய்தி. மே மாத பல நல்ல செய்திகள் காத்திருக்கின்றன. ஊதிய உயர்வு பற்றிய முக்கிய அப்டேட்டும் உள்ளது.
और पढो »
ரூ.3,000 மாத ஓய்வூதியம், அற்புதமான அரசாங்க ஓய்வூதிய திட்டம்: யாருக்கு கிடைக்கும்?Pradhan Mantri Shram Yogi Maandhan Yojana: ஏழை தொழிலாளர்களுக்காக இந்திய அரசு ஒரு சிறப்பு திட்டதை தீட்டியுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் அமைப்புசாரா துறைகளில் உள்ள ஊழியர்கள் ஓய்வூதியப் பலன்களைப் பெறுகிறார்கள். இந்த திட்டத்தின் பெயர் பிரதம மந்திரி ஷ்ரம் யோகி மான்தன் திட்டம்.
और पढो »




