Minsiter Duraimurugan: பீகாரில் எத்தனையோ தில்லுமுல்லுகளை வாக்காளர் பட்டியலில் செய்ய துவங்கியுள்ளது பாஜக என்றும் அதனை ஜாக்கிரதியாக எதிர்கொள்ள வேண்டும் என்றும் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
Minsiter Duraimurugan : பீகாரில் எத்தனையோ தில்லுமுல்லுகளை வாக்காளர் பட்டியலில் செய்ய துவங்கியுள்ளது பாஜக என்றும் அதனை ஜாக்கிரதியாக எதிர்கொள்ள வேண்டும் என்றும் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.honourkillingநாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் - மின்சார வாரியம் அறிவிப்பு! வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பிரம்மபுரம் பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் நடைபெற்ற சிறப்பு முகாமை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பார்வையிட்டார்.
பின்னர் பயனாளிகளுக்கு அரசு நல திட்டங்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி, வேலூர் மாநகராட்சி துணை மேயர் சுனில் குமார், பிரம்மபுரம் ஊராட்சி மன்ற தலைவர் ராதாகிருஷ்ணன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் துரைமுருகன், உங்களுடன் ஸ்டாலின் திட்டம் போல் மேற்கு வங்கத்தில் மம்தாவும் இதே போன்ற ஒரு திட்டத்தை கொண்டு வந்ததாக செய்தியாளர்கள் கேட்டதற்கு, ஒரு மாநிலத்தில் ஒரு திட்டம் சிறப்பாக செயல்படுமானால் அந்தத் திட்டத்தை பயன்படுத்திக்கொள்ள மற்ற மாநிலங்கள் விரும்பும் அந்த வகையில் தான் மம்தா உங்களுடன் ஸ்டாலின் போன்ற ஒரு திட்டத்தை மேற்கு வங்கத்தில் கொண்டு வந்துள்ளதாக பார்க்கிறேன். திட்டங்கள் நன்றாக இருந்தால் மற்றவர்கள் அதைப் பின்பற்றுவார்கள்.தமிழகத்தில் ஆணவக் கொலைகளை தடுக்க தனி சட்டம் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கை நிலவி வருவது குறித்து கேட்டதற்கு, ஆணவக் கொலை என்பது கண்டிக்கத்தக்கது. ஒரு நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டுப் போவதற்கு முதல் காரணம். ஒரு நாட்டில் எவ்வளவு ஆணவக் கொலை நடக்கிறது என்பதை கணக்கெடுத்து பார்த்தாகனும். அதனை இன்னும் கடுமையாக கண்டிக்கனும், தடுக்க வேண்டும். அதில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து கிடையாது. தனி சட்டம் இயற்றப்படுமா என்பது குறித்து கேட்டதற்கு அதை முதலமைச்சர் தான் சொல்லுவார். மேலும் மத்திய அரசு செய்யுமா செய்யாதா என்பது அவர்கள் இஷ்டம். அவர்கள் சொன்னால் அதனையும் நாங்கள் பின்பற்றுவோம் ஆக மொத்தம் யாராவது செய்தால் தான் தடுக்க முடியும் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது.தமிழகத்தில் பாஜகவின் வாக்கு வங்கியை அதிகரிக்க வெளிமாநிலத்தவர்களை கொண்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது குறித்து கேட்டதற்கு, எத்தனையோ தில்லுமுல்லுகளை பீகார் வாக்காளர் பட்டியலில் செய்ய தொடங்கி உள்ளது. பாஜக, அது இன்னொரு மாநிலத்திற்கு வரும். ஜாக்கிரதையாக அதை எதிர்த்தாக வேண்டும். எங்களுக்கு அந்த ஆபத்து வருகிற போது நாங்கள் அதை எதிர்க்க சீரும் சிங்கமாக மாறுவோம் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார்.மேலும் படிங்க: எடப்பாடி பழனிசாமியால் சாதனை மலர் அல்ல.. வேதனை மலரைதான் வெளியிட முடியும் - அமைச்சர் ரகுபதி உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!2026 IPL ஏலத்திற்கு முன் டெல்லி கேப்பிடல்ஸ் அணி விடுவிக்க வாய்ப்புள்ள 4 பிளேயர்கள்விவசாயம் செய்யாமலேயே வருமானம்! தமிழ்நாடு அரசின் மிகப்பெரிய குட் நியூஸ்Vinayaka ChaturthiCentral GovtNainar NagendranAugust 1, 2025: எல்பிஜி சிலிண்டர் முதல் UPI வரை, இன்று முதல் அமலுக்கு வரும் முக்கிய மாற்றங்கள்
BJP Voter List Northern Voters Tamilnadu Politics Latest News In Tamil Duraimurugan Duraimurugan Press Meet அமைச்சர் துரைமுருகன் பாஜக வாக்காளர் பட்டியல் வடமாநில வாக்காளர்கள் தமிழக அரசியல் தமிழில் சமீபத்திய செய்திகள் துரைமுருகன் துரைமுருகன் பத்திரிகையாளர் சந்திப்பு
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
25 கிலோ உடல் எடையை குறைத்து 17 ஆண்டுகளாக பராமரித்து வரும் பயிற்சியாளர்.. இந்த 5 விஷயம்தான் காரணம்!Weight Loss Journey: உடற்பயிற்சி பயிற்சியாளர் 17 ஆண்டுகளுக்கு முன்பு 25 கிலோவை குறைத்து, அதனை தற்போது வரை பராமரித்து வருகிறார்.
और पढो »
நேர்மையாக இருந்தால் தண்டனை உயர் அதிகாரிகள் மீது பகீர் குற்றச்சாட்டு... டிஎஸ்பி கொடுத்த பேட்டிதன்னை டார்ச்சர் செய்கின்றனர் என்றும் சஸ்பெண்ட் ஆக வேண்டும் என வேலை பார்க்கின்றனர் என்றும் டிஎஸ்பி சுந்தரேசன் பேட்டி
और पढो »
ஆண்களை விட பெண்கள் அதிக நேரம் தூங்க வேண்டும்! ஏன் தெரியுமா?Reason Why Women Need Sleep Than Men : ஒரு ஆராய்ச்சியில் ஆண்களை விட பெண்களுக்கு அதிக நேரம் தூக்கம் தேவைப்படுகிறது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.
और पढो »
அப்போலோ தரத்திற்கு அரசாங்க மருத்துவமனைகளும் இருக்க வேண்டும்தமிழகத்தில் முதலமைச்சர் உட்பட நம்பிக்கையுடன் சென்று சிகிச்சை பெரும் அளவிற்கு அரசாங்க மருத்துவமனைகள் இல்லையே என்பதுதான் எனது ஆதங்கம் என தமிழிசை செளந்தரராஜன் வேதனை தெரிவித்துள்ளார்.
और पढो »
வீட்டுக்கடன் வாங்க பிளானா... லட்சக்கணக்கில் பணத்தை மிச்சப்படுத்த 5 டிப்ஸ்சொந்த வீடு வாங்குவது என்பது வாழ்க்கையின் மிகப்பெரிய மற்றும் அழகான கனவுகளில் ஒன்றாகும். எனினும், இதில் உணர்ச்சிப் பூர்வமான முடிவை எடுக்காமல், முழுமையான திட்டமிடலுடன், நன்கு யோசித்த பிறகு நீங்கள் ஒரு வீட்டை வாங்க வேண்டும்.
और पढो »
