இந்த கட்டுரை குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே கற்பிக்க வேண்டிய 7 முக்கிய பாடங்கள் பற்றி விளக்குகிறது. மரியாதை, ஆர்வம், புரிந்துணர்வு, மன்னிக்கும் குணம், மனநிறைவு, கருணை, மற்றும் நன்றியுணர்வு ஆகியவை குழந்தைகளின் நல்லுணர்வை வளர்ப்பதற்கு முக்கியமானவை.
குழந்தைகளுக்கு சிறு வயதில் இருந்தே சில விஷயங்களை கற்றுக்கொடுத்து வளர்த்தால் அவர்கள் நல்ல மனிதர்களாக வளரலாம். அவை என்னென்ன பாடங்கள் தெரியுமா? குழந்தைகள் தான் அடுத்த சமுதாயத்தின் இளைஞர்களாக உருவாகுவர். இவர்களுக்கு சில நல்ல விஷயங்களை சொல்லிக்கொடுத்து வளர்த்தால்தான் அவர்கள் வளர்ந்த பிறகு நல்ல மனிதர்களாக உருவெடுப்பர். எனவே, சிறு வயதில் இருந்தே இவர்களுக்கு நல்ல பாடங்களை கற்பித்து, நல் விஷயங்களை போதித்து வளர்க்க வேண்டும்.
அப்படி, அவர்களுக்கு 3 வயதில் இருந்து கற்றுத்தர வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பதை இங்கு பார்ப்போம். மரியாதை: பெரியவர்கள் முதல் சிரியவர்கள் வரை அனைவருக்கும் சரிசமமாக மரியாதை கொடுக்க கற்றுக்கொடுக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் வளரும் போது எந்த தாழ்ச்சி உயர்ச்சியும் இல்லாமல் அனைவரையும் சரிசமமாக பார்க்க கற்றுக்கொள்வர். ஆர்வம்: இந்த உலகில் எதுவுமே ‘ஏன், எதற்கு, எப்படி’ என்று கேள்வி கேட்டால்தான் தெரியும். கேள்வி கேட்கும் ஆர்வத்தை அவர்கள் மத்தியில் தூண்ட வேண்டும். அவர்களை சுற்றி இருக்கும் அனைத்து விஷயங்களை பற்றியும் ஆர்வத்துடன் இருக்க வேண்டும். புரிந்துணர்வு: பிறரை புரிந்து கொள்வது எப்படி, சிரமம் என்ற ஒன்று வரும் போது பிறருக்கு உறுதுணையாக இருப்பது எப்படி என்பதை கற்றுக்கொடுக்க வேண்டும். மன்னிக்கும் குணம் : குழந்தைகளுக்கு மன்னிப்பதும் மறப்பதும் எப்படி என்பதை கற்றுக்கொடுக்க வேண்டும். அப்படி பிறரை மன்னித்தால் மட்டும்தான் மனம் இலகுவாகும் என்பதை அவர்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். மனநிறைவுடன் இருக்க வேண்டும்: எதை செய்தாலும், கவனச்சிதறல் இன்றி செய்ய வேண்டும் என்பதை அவர்களுக்கு கற்றுத்தர வேண்டும். அப்போதுதான் அவர்கள் செய்யும் வேலைகளில் அவர்களுக்கே மனநிறைவு பிறக்கும். கருணை குணம்: எங்கு சென்றாலும், பிறரிடம் கருணையுடனும் இரக்கத்துடனும் நடந்துகொள்ள வேண்டும் என்பதை கற்றுக்கொடுக்க வேண்டும். நன்றியுணர்வு: தங்களுக்கு எது கிடைத்தாலும் அதற்கு நன்றியுணர்வோடு இருக்க வேண்டும் என்பதை குழந்தைகளுக்கு பெரியவர்கள் கற்றுக்கொடுக்க வேண்டும்
குழந்தைகள் பாடங்கள் வளர்ப்பு மரியாதை ஆர்வம் புரிந்துணர்வு மன்னிப்பு மனநிறைவு கருணை நன்றியுணர்வு
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
தமிழ்நாடு மின்சாரத்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்புTNEB | மழைக்காலத்தில் மக்கள் கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு மின்சாரத்துறை முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
और पढो »
ஒரு மாதத்திற்குள் முடிக்க வேண்டும்! அரசு ஊழியர்களுக்கு முக்கிய உத்தரவை பிறப்பித்த அரசு!Tamilnadu Government: அரசு ஊழியர்கள் மக்களுக்கு வேண்டிய உதவிகளை உடனே செய்வதற்கு ஏதுவாக, ஊழியர்களுக்கு தமிழக தலைமை செயலாளர் முருகானந்தம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளார்.
और पढो »
ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு: நினைவில் கொள்ள வேண்டிய மத்திய அரசின் வழிகாட்டுதல்கள்Pensioners Latest News: ஓய்வூதியதாரர்கள் தங்கள் ஓய்வூதியம், பணிக்கொடை மற்றும் பிற நன்மைகள் தொடர்பாக சரியான நடைமுறையைப் பின்பற்ற அரசின் வழிகாட்டுதல்கள் உதவும்.
और पढो »
Live: தவெகா-வில் இணையும் ஆதவ் அர்ஜுனா? சட்டசபையில் இன்று முக்கிய விவாதம் வானிலை அப்டேட்?Live: தவெகா-வில் இணையும் ஆதவ் அர்ஜுனா? சட்டசபையில் இன்று முக்கிய விவாதம் வானிலை அப்டேட்? - இன்றைய முக்கிய செய்திகள்
और पढो »
Live: ஆஸ்திரேலியாவில் சாதனை படைக்கும் இந்தியா... தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு... இன்றைய முக்கிய செய்திகள்!Live: ஆஸ்திரேலியாவில் சாதனை படைக்கும் இந்தியா... தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு... இன்றைய முக்கிய செய்திகள்!
और पढो »
Live Election Results 2024 : மகாராஷ்டிரா ஜார்க்கண்ட் தேர்தல் முடிவுகள் இந்தியா - ஆஸி டெஸ்ட் உள்ளிட்ட இன்றைய முக்கிய செய்திகள்Live Election Results 2024 : மகாராஷ்டிரா ஜார்க்கண்ட் தேர்தல் முடிவுகள் இந்தியா - ஆஸி டெஸ்ட் உள்ளிட்ட இன்றைய முக்கிய செய்திகள்
और पढो »