இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) நமன் விருதுகள் 2025 நிகழ்ச்சி மும்பையில் நடைபெற்றது. 27 முக்கிய விருதுகள் அறிவிக்கப்பட்டன. ஸ்மிருதி மந்தனா, ஜஸ்பிரித் பும்ரா, சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் முக்கிய விருதுகளை பெற்றனர்.
பிசிசிஐ ( BCCI ) ஆண்டுதோறும் சிறந்த இந்திய கிரிக்கெட் டின் வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு பல்வேறு விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது. இந்த விருது நிகழ்ச்சி ' நமன் விருதுகள் ' என்றழைக்கப்படுகிறது. அந்த வகையில், நமன் விருதுகள் 2025 நிகழ்வில் யார் யாருக்கு என்னென்ன விருதுகள் கிடைத்துள்ளன என்பதை இங்கு விரிவாக காணலாம்.இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் 2025ஆம் ஆண்டுக்கான நமன் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று மும்பையில் நடைபெற்றது. மொத்தம் 27 விருதுகள் அறிவிக்கப்பட்டன.
சர்வேதச ஒருநாள் போட்டிகளில் மகளிர் பிரிவில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியதற்கான விருது - தீப்தி சர்மா, சர்வதேச அரங்கில் மகளிர் பிரிவில் சிறந்த அறிமுக வீராங்கனை விருது - ஆஷா சோப்னா. சர்வேதச ஒருநாள் போட்டிகளில் மகளிர் பிரிவில் அதிக ரன்கள் அடித்ததற்கான விருது - ஸ்மிருதி மந்தனா, சர்வதேச அளவில் கிரிக்கெட் வீராங்கனை - ஸ்மிருதி மந்தனா. ஆடவர் பிரிவில் சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரருக்கான பாலி உம்ரிகர் விருது - ஜஸ்பிரித் பும்ரா, சர்வதேச அரங்கில் ஆடவர் பிரிவில் சிறந்த அறிமுக வீரர் விருது - சர்பராஸ் கான், பிசிசிஐ சிறப்பு விருது - ரவிச்சந்திரன் அஸ்வின். கர்னல் சிகே நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருது - சச்சின் டெண்டுல்கர். இந்த விருதை ஐசிசி தலைவர் ஜெய் ஷா அவருக்கு வழங்கினார். உள்நாட்டு போட்டிகளில் சிறப்பாக விளையாடிய உள்ளூர் அணிக்கு வழங்கப்படும் பிசிசிஐ விருது மும்பை கிரிக்கெட் சங்கத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. 16 வயதுக்குட்பட்டோருக்கான விஜய் மெர்ச்சன்ட் டிராபியில் அதிக விக்கெட் எடுத்தவர்களுக்கான ஜக்மோகன் டால்மியா கோப்பை ஹேம்சுதேஷன் ஜெகநாதன் பெற்றுள்ளார். மேலும், 23 வயதுக்குட்பட்டோருக்கான CK நாயுடு கோப்பையில் (எலைட் பிரிவு) அதிக விக்கெட் வீழ்த்தியவருக்கான எம்.ஏ. சிதம்பரம் கோப்பை பி. வித்யுத் பெற்றுள்ளார். இவர்கள் இருவரும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் ஆவர்
நமன் விருதுகள் BCCI ஸ்மிருதி மந்தனா ஜஸ்பிரித் பும்ரா சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட் விருதுகள்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
தமிழ்நாட்டில் பத்ம விருது பெற்ற 13 பேர் - பத்மஸ்ரீ விருதுகள் 20252025 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டுக்கு மட்டும் 13 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
और पढो »
குடியரசு தினம் 2025: சிறந்த காவல் நிலையம் விருது எந்த மாவட்டத்திற்கு? முழு விவரம் இதோ!சென்னையில் இன்று நடைபெற்ற குடியரசு தின விழாவில், ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட பல்வேறு விருதுகள் மற்றும் பதக்கங்களை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.
और पढो »
Republic Day 2025 Live Updates: பத்ம விருதுகள், Budget 2025 எதிர்பார்ப்புக்கள் உள்ளிட்ட அனைத்து செய்திகளும் இங்கேஇன்று குடியரசு தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படும் நாட்டின் தலைநகரான டெல்லியில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு கொடியேற்றி வைக்கிறார். தமிழ்நாட்டில் சென்னை மெரினா கடற்கரை அருகே காமராசர் சாலை, உழைப்பாளர் சிலை அருகில் அணிவகுப்பு நடைபெற உள்ளது. மேலும், பட்ஜெட் 2025 எதிர்பார்ப்புகள் உள்ளிட்ட உள்ளூர், மாநில, தேசிய, உலக, பொருளாதார, விளையாட்டு போன்ற அனைத்து விதமான இன்றைய செய்திகள் குறித்த உடனடி அப்டேட்களை இங்கு காணலாம்.
और पढो »
தமிழகத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு அறிவிப்பு2025 பொங்கலுக்கு தமிழக அரசு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பச்சரிசி, சர்க்கரை மற்றும் கரும்பு வழங்கும். பொங்கல் பரிசுத் தொகுப்புடன் இலவச வேட்டி சேலைகளும் வழங்கப்படும்.
और पढो »
சனிப் பெயர்ச்சி 2025: மிதுனம், கன்னி ராசிகளுக்கு சிறந்த வாய்ப்புகள்மார்ச் மாதத்தில் சனி பெயர்ச்சி ராசிகளை எவ்வாறு பாதிக்கும்? சிறந்த வாய்ப்புகளைப் பெறும் ராசிகள்
और पढो »
காலக்கெடு ஜனவரி 15.. ஊழியர்களுக்கு ரூ.15000 ஊக்கத்தொகை குறித்து EPFO புதிய அறிவிப்புELI Scheme Latest News: மாத சம்பளம் பெறும் ஊழியர்களுக்கான ₹15000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை குறித்து முக்கிய அறிவிப்பு
और पढो »