பிறந்த நாளை முன்னிட்டு இரத்த தானம் செய்த நடிகர் சூர்யா! ரசிகர்கள் பாராட்டு..
வரும் 23ஆம் தேதி தனது பிறந்தநாள் வரவிருப்பதை ஒட்டி, நடிகர் சூர்யா தானும் இரத்த தானம் செய்துள்ளார்.குருவின் உச்ச ஆட்டம்.. இந்த ராசிகளுக்கு பணம், அதிர்ஷ்டம், ராஜராஜ பொற்காலம்குரு வெறி ஆட்டத்தை தொடங்கிவிட்டார்.. இந்த ராசிகளுக்கு பணம், அதிர்ஷ்டம், திடீர் லக்Saturn Transitரசிகர்களைப் போலவே ஒவ்வொரு ஆண்டும் தானும் ரத்ததானம் செய்ய உள்ளேன் என கடந்த ஆண்டு எடுத்துக்கொண்ட உறுதி மொழியினை நிறைவேற்றும் விதமாக, நடிகர் சூர்யா தானும் இரத்த தானம் செய்துள்ளார்.
நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு, வடசென்னை தெற்கு மாவட்டம் சூர்யா நற்பணி மன்றம் சார்பில், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில், நேற்றைய தினம் 400 க்கும் மேற்பட்டோர் இரத்த தானம் செய்தனர். இன்னும் பல மாவட்டங்களில் ரசிகர் மன்றம் சார்பில் இரத்த தானம் செய்யவும் ரசிகர்கள் திட்டமிட்டுள்ளனர்.பிறந்த நாள் மட்டுமின்றி, எப்போது எங்கு தேவைப்பட்டாலும், இரத்த தானம் அளிக்கும் ஒரு அமைப்பையும் ரசிகர்கள் மேற்கொண்டுள்ளனர்.
கடந்த ஆண்டு 2000க்கும் மேற்பட்டோர் சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு இரத்த தானம் வழங்கினர். அவர்களை நேரில் அழைத்து விருந்தளித்து பாராட்டிய நடிகர் சூர்யா, இனி ஒவ்வொரு ஆண்டும் தானும் ரத்த தானம் செய்ய உள்ளதாக தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையில் நேற்று ரசிகர்கள் ரத்த தானம் செய்த நிலையில் இன்று அவர் ரத்த தானம் செய்து, ரசிகர்களுக்கும் நடிகர்களுக்கும் ஒரு முன்னுதாரணமாக திகழ்ந்துள்ளார்.நடிகர் சூர்யாவின் மனிதம் போற்றும் இந்த செயல் அனைவரது பாராட்டையும் பெற்று வருகிறது.
நடிகர் சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கி வரும் படம், கங்குவா. இந்த திரைப்படத்தில் நடிகர் சூர்யா இரு வேடங்களில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. சையின்ஸ் ஃபிக்ஷன் த்ரில்லராக உருவாகி இருக்கும் இந்த படத்தை கிரீன் ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது. இதில் சூர்யாவிற்கு ஜோடியாக பாலிவுட் நாயகி திஷா பதானி நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 1 ஆண்டிற்கும் மேலாக நடைப்பெற்று வருகிறது. சூரரை போற்று படத்தின் இந்தி ரீ-மேக்கான சர்ஃபிரா படத்தில் சூர்யா காமியோ கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.
Suriya Birthday Suriya Family Blood Donation Suriya Birthday Celebration Actor Suriya Blood Donation Actor Suriya Birthday Actor Suriya Donated His Blood Actor Suriya Born Day Actor Suriya Charitable Activities நடிகர் சூர்யா நடிகர் சூர்யா ரத்த தானம் ரத்த தானம் செய்த நடிகர் சூர்யா சூர்யாவின் அடுத்தடுத்த படங்கள் Actor Suriya Upcoming Movies Actor Suriya Movies List
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
Kallakurichi Death : “மதுபான கடைகளை குறைக்க வேண்டும்” நடிகர் விஷாலின் வைரல் பதிவு!Kallakurichi Death : “மதுபான கடைகளை குறைக்க வேண்டும்” நடிகர் விஷாலின் வைரல் பதிவு!
और पढो »
நல்ல வரவேற்பை பெற்று வரும் நவாசுதீன் சித்திக் நடித்துள்ள புதிய படம்!நடிகர் நவாசுதீன் சித்திக் ஒரு புத்திசாலித்தனமான போலீஸ்காரராக கலக்கும், இன்வெஸ்டிகேட் திரில்லரான ரவுது கா ராஸ் தற்போது ZEE5 தளத்தில் ஸ்ட்ரீமாகிறது.
और पढो »
என்னுடைய படம் வெளியாகும் தியேட்டர்களுக்கு மிரட்டல் - ரஞ்சித் பரபரப்பு புகார்!தன்னுடைய திரைப்படம் வெளியிடும் தியேட்டர்களுக்கு மிரட்டல் வருகிறது என்று மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் ரஞ்சித் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
और पढो »
துல்கர் சல்மானின் ‘லக்கி பாஸ்கர்’ செப்டம்பர் 7 ஆம் ஆண்டு ரிலீஸ்சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸின் பிரம்மாண்டமான பான்-இந்திய திரைப்படமான, நடிகர் துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர் செப்டம்பர் 7ஆம் தேதி வெளியாகிறது.
और पढो »
இந்தியன் 2 படத்தில் நடிக்க நடிகர் சித்தார்த் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?Indian 2 siddharth Salary : இந்தியன் 2 படத்தில் நடிப்பதற்காக நடிகர் சித்தார்த் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
और पढो »
கமலுக்கு ரஜினி, விஜய், அஜித்தை விட ரசிகர்கள் குறைவு! ரசிகர்கள் குமுறல்-என்னாச்சு?கமலை விட ரஜினி-விஜய்க்கு ரசிகர்கள் அதிகம்! குமுறும் கமல் ரசிகர்கள்..என்னாச்சு?
और पढो »