Tamil Nadu Diwali offers : தீபாவளி பண்டிகையையொட்டி தமிழக பெண்களுக்கு குட்நியூஸ் வெளியாகியுள்ளது. 30 விழுக்காடு தள்ளுபடியில் விலை உயர்ந்த பட்டுப்புடவைகளை வாங்கலாம்.
Tamil Nadu Diwali offers : தீபாவளி பண்டிகையையொட்டி தமிழக பெண்களுக்கு குட்நியூஸ் வெளியாகியுள்ளது. 30 விழுக்காடு தள்ளுபடியில் விலை உயர்ந்த பட்டுப்புடவைகளை வாங்கலாம்.PowercutTamil Nadu governmentTamil Nadu Diwali offers : தீபாவளி பண்டிகையையொட்டி தமிழ்நாடு அரசு பெண்களுக்காக இப்போதே அதிரடி ஆஃபரை அறிவித்துள்ளது.
புதிய புடவைகளை எடுக்கும் பெண்கள் 30 விழுக்காடு தள்ளுபடியில் விலை உயர்ந்த பட்டுப்புடவைகளை வாங்கிக்கொள்ளலாம். ஆம், தமிழ்நாடு முழுவதும் உள்ள கோ-ஆப்டெக்ஸ் மூலம் அரசு தீபாவளி ஆடை விற்பனையை தொடங்கியுள்ளது. இதில் பட்டுப்புடவைகள் முதல் பல வகையிலான துணிகள் தரமாகவும், அதிக விலை தள்ளுபடிகளிலும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டிருக்கும் அறிவிப்பில்,"கோ-ஆப்டெக்ஸ் நிறுவனமானது கடந்த 90 ஆண்டுகளாக தமிழக கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வருகிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நெசவாளர்களால் உற்பத்தி செய்யப்பட்ட புதிய வடிவமைப்பிலான ஆடை ரகங்கள் இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பட்டு ரகங்களில் காஞ்சிபுரம், ஆரணி பட்டு, சுங்குடி சேலைகள், பருத்தி சேலைகள், படுக்கை விரிப்புகள், வேட்டிகள், லுங்கிகள், துண்டுகள், விரிப்புகள், பனியன் ரகங்கள், ரெடிமேட் சட்டைகள், கைத்தறி ரகங்கள், ஆர்கானிக் பருத்தி ஆடைகள், லினன் சட்டைகள், வீட்டு உபயோகப் பொருட்கள், கதர் மற்றும் ரெடிமேட் ஆடைகள் என பல்வேறு ரகங்கள் விற்பனைக்கு வந்துள்ளன.அரசு மற்றும் அரசு சார்ந்த ஊழியர்களுக்கு கடன் வசதியுடன் 30% சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மூன்று விற்பனை நிலையங்களுக்கு ரூ. 178.00 இலட்சம் விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு அனைத்து மக்களும் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் பொருட்களை வாங்கி, கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த உதவ வேண்டும்" என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதேபோல் தென்காசியிலும் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை தொடங்கியுள்ளது. நடப்பாண்டு ரூ.35 லட்சம் மதிப்பு ஜவுளி, உற்பத்தி பொருள்களை விற்பனை செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், கோ-ஆப்டெக்ஸ் நிறுவனமானது மாதந்திர சேமிப்பு திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தில் குறைந்தபட்சம் ரூ.300 முதல் சேமித்து 11 மாத தவணைகள் செலுத்திய பிறகு, 12ஆவது மாத தவணைத் தொகையை கோ-ஆப்டெக்ஸ் நிறுவனமே செலுத்திவிடும். அத்துடன் முதிர்வு தொகையில் இருந்து 30 விழுக்காடு தள்ளுபடியில் சந்தா செலுத்தியவர்கள் துணிகளை பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பெண்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளவும். அனைத்து மாவட்டங்களிலும் கோப்டெக்ஸ்களில் துணி விற்பனை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!Rain Alertஅக். 7ல் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்: தமிழ்நாடு அரசு கூட்டுறவு துறை ஊழியர் சங்கம் அறிவிப்புTamil Nadu governmentTn Weather Alert
Women Saree Discount 30% Discount Tamil Nadu Co-Optex Diwali Sale Tamil Nadu Co-Optex தமிழ்நாடு தீபாவளி தள்ளுபடி தமிழ்நாடு அரசு அறிவிப்பு கோ ஆப்டெக்ஸ் விற்பனை Diwali Saree Sale Government Diwali Offers Tamil Nadu Women Discounts Handloom Sarees Sale Co-Optex Handloom Products பட்டுப்புடவை தள்ளுபடி சேலை தள்ளுபடி தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்புகள்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
குழந்தை ஸ்கேன், கருக்கலைப்பு - தமிழ்நாடு சுகாதாரத்துறை வெளியிட்ட முக்கிய எச்சரிக்கைTamil Nadu Government : குழந்தை ஸ்கேன், கருக்கலைப்பு குறித்து தமிழ்நாடு அரசு கடும் எச்சரிக்கையை கொடுத்துள்ளது.
और पढो »
மூளையை திண்ணும் அமீபா - தமிழ்நாடு அரசின் மிகப்பெரிய எச்சரிக்கைTamil Nadu Government : மூளையை திண்ணும் அமீபா குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டிருக்கும் மிகப்பெரிய எச்சரிக்கை குறித்து இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
और पढो »
மகளிர் சுய உதவிக் குழு பெண்களுக்கான முக்கிய அறிவிப்புTamil Nadu government job : மகளிர் சுய உதவிக் குழு பெண்களுக்கான வேலை வாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
और पढो »
தீபாவளி பட்டாசு கடை அமைக்க விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்Diwali Firecracker Shop License in Tamil Nadu : தீபாவளி பண்டிகைக்கு தற்காலிக பட்டாசு கடை அமைக்க விண்ணப்பிப்பது எப்படி என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »
Tamil Nadu Horror: প্রেমিকের সঙ্গে ছাদে ঘনিষ্ঠ স্ত্রী... দু হাতে জোড়া কাটা মুণ্ডু ঝুলিয়ে জেলে ঢুকলেন স্বামী! ভয়ংকর! হাড়হিম!Tamil Nadu Horror: Husband beheads wife and her lover, carries their heads to police station
और पढो »
பள்ளி மாணவிகளுக்கு ரூ.1000... தமிழ்நாடு அரசின் ஊக்கத்தொகைTamil Nadu Government: கிராமப்புறங்களில் படிக்கும் பள்ளி மாணவியருக்கு ரூ.1000 வரை ஊக்கத்தொகையை தமிழ்நாடு அரசு வழங்க உள்ளது.
और पढो »




