பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் 'வணங்கான்' படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. சூர்யாவின் பதிலாக அருண் விஜய் நடிக்கும் இந்த படத்திற்கான இசை வெளியீட்டு விழாவில், பாலாவிற்கு மிக நெருக்கமாக இருந்த விக்ரம் இடம்பெறவில்லை.
பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்திருக்கும் வணங்கான படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைப்பெற்றது. இந்த படத்தில் முதலில் சூர்யா நடிப்பதாக இருந்தது. ஆனால், அதிலிருந்து அவர் விலகிய நிலையில் அருண் விஜய் ஹீரோவாக நியமிக்கப்பட்டார். தமிழ் திரையுலகின் முக்கிய இயக்குநர்களுள் ஒருவராக இருக்கிறார் இயக்குநர் பாலா . மறைந்த மூத்த இயக்குநர் பாலுமகேந்த்ராவிடம் உதவி இயக்குநராக இருந்த இவர் 1999ல் வெளியான சேது படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.
இந்த படம் இவருக்கு தனி அங்கீகாரத்தை கொடுத்தற்கு ஒரு காரணம் விக்ரமின் நடிப்பு. இப்படி, சேது, நந்தா, பிதாமகன் போன்ற படங்களை எடுத்த அவர் அதில் சில ஹிட்களையும் கொடுத்தார். கடந்த 25 வருட காலத்தில், இவர் படங்கள் பெரிதாக ஹிட் அடிக்கவில்லை என்றாலும், பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதாக இருந்தது. சமீப காலங்களில் இவர் எடுத்த வர்மா, நாச்சியார், தாரை தப்பட்டை ஆகிய படங்கள் பெரிதும் ஹிட் ஆகவில்லை. சூர்யாவுடனான இவரது வணங்கான் திரைப்படம்தான் பெரிய ப்ராஜெக்டாக பார்க்கப்பட்டது. ஆனால், அதிலிருந்து சூர்யா விலகிவிட்டார். இதையடுத்து அருண் விஜய் அதில் நாயகனாக நடிக்க, தற்போது அப்படம் ரிலீஸிற்கு ரெடியாக இருக்கிறது. இந்த படத்திற்காகவும், பாலாவின் 25 ஆண்டு கால சினிமா வாழ்க்கையை பாராட்டும் வகையிலும் நேற்று விழா நடைப்பெற்றது. இதில் சூர்யா, சிவகார்த்திகேயன், சிவகுமார் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினரகளாக கலந்து கொண்டனர். ஆனால் பாலாவிற்கு மிக நெருக்கமாக இருந்த விக்ரம் இதில் கலந்து கொள்ளவில்லை.பாலா-விக்ரமின் கூட்டணியில் உருவான படங்கள், இருவருக்குமே பெரும் வளர்ச்சியை கொடுத்திருக்கிறது. பாலாவால்தான் விகர்முக்கு சியான் என்ற பெயரும் வந்தது. ஆனால் இவர்கள் இருவரும் பிதாமகன் படத்திற்கு பிறகு இருவரும் ஒன்றாக சேர்ந்து ஒரு படத்திலும் பணியாற்றவில்லை. ஆனாலும் இவர்களுக்குள் இருந்த நட்பு விடுபடவே இல்லை. இதனால், 2018ஆம் ஆண்டு தன் மகன் துருவ்-ஐ பாலா இயக்கிய வர்மா படத்தில் நடிக்க வைத்தார் விக்ரம
பாலா விக்ரம் வணங்கான் அருண் விஜய் சூர்யா சினிமா இசை வெளியீட்டு விழா தமிழ் சினிமா
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
முற்போக்கு சிந்தனையாளர்கள் திரைத்துறையில் வரவேண்டும்நெஞ்சு பொறுக்குதில்லையே பட இசை வெளியீட்டு விழாவில் தொல்.திருமாவளவன் திரைத்துறையில் சனாதான சக்திகள் ஓங்கி விடக்கூடாது என்று பேசியுள்ளார். இதுகுறித்து முழு விவரம் இங்குப் பார்ப்போம்.
और पढो »
கலைஞர், ஜெயலலிதா, விஜயகாந்த், விஜய் கூத்தாடிகள் தான் - எக்ஸ்டிரீம் பட விழாவில் பேரரசு!எத்தனை காலம் புஷ்பா மாதிரி படங்கள் உங்களைக் காப்பாற்றும்? என்று தயாரிப்பாளர் கே ராஜன் எக்ஸ்டிரீம் பட இசை வெளியீட்டு விழாவில் பேசி உள்ளார்.
और पढो »
திருமாவளவனுக்கு ஆதரவு! திமுகவிற்கு எதிர்ப்பு! விஜய்யின் அதிரடி பேச்சு!சென்னையில் நடைபெற்ற அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் திமுக மற்றும் மத்திய அரசை மீண்டும் எதிர்த்து பேசி உள்ளார்.
और पढो »
திரைத்துறையில் 25 ஆண்டுகள் - பாலாவிற்கு வெற்றி விழா! சூர்யா கலந்து கொள்வாரா?திரைத்துறையில் இயக்குநர் பாலாவின் 25 ஆண்டு கலைப்பயணம் மற்றும் ‘வணங்கான்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் வரும் டிசம்பர் 18ம் தேதி நடைபெற உள்ளது.
और पढो »
விடாமுயற்சி படத்தில் மாற்றம்? பொங்கலுக்கு வெளியாகும் வீர தீர சூரன்?சீயான் விக்ரம் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வீர தீர சூரன்- பார்ட் 2 எனும் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.
और पढो »
வீர தீர சூரன் படத்திற்கு பிறகு விக்ரம் நடிக்கும் படம்! இயக்குநர் யார் தெரியுமா?வீர தீர சூரன் படத்திற்கு பிறகு விக்ரம் நடிக்கும் படம்! இயக்குநர் யார் தெரியுமா?
और पढो »